இன்று ஓய்வு பெற இருந்த அரசு பள்ளி ஹெச்.எம். சஸ்பெண்ட்

கோவை: கோவையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமை ஆசிரியை நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கோவை ஆலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஆனந்தகுமார், அப்பள்ளியில் படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த மாணவி போலீசாரிடம் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து ஆனந்தகுமாரை கைது செய்தனர். இந்த வழக்கில் மாணவி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது புகார் அளித்தும் பள்ளி தலைமை ஆசிரியை ஜீவா ஹட்சன் மற்றும் ஆசிரியர்கள் அதனை மறைத்ததாக தெரிகிறது. இதையடுத்து, பள்ளி தலைமை ஆசிரியை உள்பட 6 ஆசிரியர்கள் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவியை மிரட்டிய ஓவிய ஆசிரியர் ராஜ்குமார் கடந்த 2023 டிசம்பர் 22ம் தேதி சஸ்பண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று (30ம் தேதி) ஓய்வுபெற இருந்த தலைமை ஆசிரியை ஜீவா ஹட்சன் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Related posts

ஒய்எஸ்ஆர் காங். எம்பி வீட்டு காவலில் வைப்பு: ஆந்திராவில் பரபரப்பு

திருச்சியில் கலைஞர் பெயரில் பிரமாண்ட நூலகம் மத்திய மாவட்ட இளைஞர்களுக்கு கலங்கரை விளக்கமாக திகழும்: கல்வியாளர்கள் கருத்து

ரயிலில் குட்கா கடத்திய 13 பேர் கைது