மரியாதை நிமித்தமாக சென்னை போலீஸ் கமிஷனர் அருணுடன் என்ஐஏ தென் மண்டல இயக்குநர் சந்தோஷ் ரஸ்தோகி சந்திப்பு

சென்னை: சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருணை மரியாதை நிமித்தமாக என்ஐஏ தென் மண்டல இயக்குநர் சந்தோஷ் ரஸ்தோகி நேற்று சந்தித்தார். அப்போது இருதரப்பு தகவல்களும் பரிமாற்றம் செய்வது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) தென் மண்டல இயக்குநர் சந்தோஷ் ரஸ்தோகி மரியாதை நிமித்தமாக சென்னை போலீஸ் கமிஷனர் அருணை சந்தித்தார். அப்போது, சென்னை பெருநகர காவல்துறை மற்றும் தேசிய புலனாய்வு முகமைக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், கலந்துரையாடினார்.

இந்த உயர் மட்டக் கூட்டத்தில் பல்வேறு பிராந்திய பிரச்னைகள் மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த குறிப்பிட்ட நிகழ்வுகள் குறித்து கலந்துரையாடினர். மேலும், இரு துறைகளுக்கிடையில் சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் தடையற்ற தகவல் பரிமாற்றத்தை வளர்ப்பதன் முக்கியத்துவம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த சந்திப்பின் போது பாதுகாப்பு சம்பந்தமான முக்கிய வழக்குகளை திறம்பட புலனாய்வு செய்ய ஏதுவாக இருதரப்பு தகவல் பரிமாற்றம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்