காவிரி விவகாரம் தொடர்பாக நிறைவேற்றிய தீர்மானத்தை ஒன்றிய அரசுக்கு அனுப்ப தமிழ்நாடு அரசு முடிவு!

சென்னை: காவிரியில் நீர் திறக்க வலியுறுத்தி முதலமைச்சர் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானத்தை ஒன்றிய அரசுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக அரசு தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீரை காவிரியில் திறந்து விடவில்லை. உச்சநீதிமன்றம், காவிரி ஆணையம் பரிந்துரையையும் அது செயல்படுத்தவில்லை. இதன் காரணமாக தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. சம்பா, தாளடி சாகுபடி கேள்விக்குறியாகி உள்ளது.

காவிரியில் நீர் திறக்க கர்நாடக அரசுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட வலியுறுத்தி முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நேற்று முன்தினம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பேரவைச் செயலகம் மூலம் இன்று தலைமை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனிடையே காவிரி மேலாண்மை ஆணைய அவசர கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

Related posts

ரயில் ஓட்டுநர் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும்: ஒன்றிய அமைச்சரிடம் திமுக எம்பி வலியுறுத்தல்

சவாரி அழைத்து செல்வதுபோல் நடித்து பீகார் தொழிலாளர்களை கடத்தி பணம் பறித்த ஆட்டோ டிரைவர்: தப்பிய கூட்டாளிகளுக்கு வலை

காவேரி மருத்துவமனை, டிசிஎஸ் நிறுவனம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்: 5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு