ஊராட்சி மன்ற கூட்டத்தில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றக் கோரி தீர்மானம்

திருவள்ளூர்: பூந்தமல்லி ஒன்றியத்திற்குட்பட்ட கொசவன்பாளையம் ஊராட்சியில் வார்டு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத் தலைவர் அண்ணாகுமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் லல்லிபாபு முன்னிலை வகித்தார். இதில் வார்டு உறுப்பினர்கள் சீனிவாசன், யுவராணி, முனியம்மாள், ஆனந்தன், சந்திரலேகா, கீதா, ரேவதி, வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் ஊராட்சி செயலர் விஸ்வநாதன் உயிரிழந்ததையடுத்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பிறகு கொசவன்பாளையம் அருந்ததியர்பாளையம் பகுதிகளில் சிமெண்ட் ரோடு, பைப் லைன், கொட்டாமேடு காலனியில் மழை நீர் கால்வாய், லட்சுமிபதி நகர் பகுதியில் மழை நீர் கால்வாய், பொன்னியம்மன்மேடு ஸ்ரீராம் நகரில் பேவர்பிளாக் ரோடு, சாரதி நகர், ஜவகர் நகரில் தார் சாலை, புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு மின் இணைப்பு, பள்ளிக்கு எதிரில் உள்ள சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்பது உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related posts

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சொல்லிட்டாங்க…

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா