சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: விசிக உயர்நிலை கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகமான அம்பேத்கர் திடலில் அக்கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் உயர்நிலைக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டனர். இக்கூட்டத்தில், ‘‘2023 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது போல், பட்டியல் சமூகத்தினர் துணைத்திட்டம் மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டம் ஆகியவற்றுக்கான சட்டத்தை உடனடியாக எதிர்வரும் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும். பீகார் அரசைப் போல தமிழ்நாடு அரசும் சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ளவேண்டும்’’ என்பது உள்ளிட்ட 10 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related posts

உலக சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு: மும்பையில் இன்று வெற்றி ஊர்வலம்

டி20 ஆல்ரவுண்டர் தரவரிசை; ஹர்திக் பாண்டியா நம்பர் 1: முதல் இந்திய வீரராக சாதனை

பிரசந்தா பதவி விலக வேண்டும்; நேபாளி காங்கிரஸ் கோரிக்கை: நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பிரதமர் முடிவு?