எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சப்போட்டா!

நன்றி குங்குமம் தோழி

இனிப்பு மற்றும் கேரமல் போன்ற சுவைக்காக அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடிய பழம் சப்போட்டா. இந்தப் பழத்தில் நம் உடலுக்கு தேவையான வைட்டமின், தாதுக்கள், நார்ச்சத்துகள் உள்ளது. சப்போட்டா பழத்தை அப்படியே கடித்து சாப்பிடலாம் அல்லது ஜூஸாகவோ பருகலாம். வேறு உணவுகளோடு சேர்த்தும் சாப்பிடலாம்.

* இந்தியாவில் குஜராத் மாநிலத்தில்தான் சப்போட்டா அதிகம் விளைவிக்கப்படுகிறது. ஆற்றலுக்கும், அழகுக்கும், ஆரோக்கியத்துக்கும் மிகச்சிறந்தது சப்போட்டா பழம்.

* புரோட்டீனும், இரும்புச்சத்தும் அதிகமாக உள்ளது. மேலும் இதில் சுண்ணாம்பு, மக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ் பொட்டாசியம், சோடியம், துத்தநாகம் போன்ற நுண்சத்துக்களும், மாவுச்சத்து, சர்க்கரைச்சத்து, நார்ச்சத்து, கொழுப்பு, புரதச்சத்தும் பெரிதும் நிரம்பியுள்ளது.

* இதிலிருக்கும் வைட்டமின் ‘சி’ மற்றும் ‘ஏ’ சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.

* உடலில் பித்தம் இருந்தால் இப்பழத்தைச் சாப்பிட்டு, பின்பு ஒரு டீஸ்பூன் சீரகத்தை மென்று விழுங்கினால் எந்தவித பித்தமும் தலை தெறிக்க ஓடிவிடும்.

* கொழுப்பு பிரச்னை உள்ளவர்களுக்கு இப்பழம் ஒரு அருமருந்து. இப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் செரிமான பிரச்னைகள் நீங்குகிறது.

* பழ விழுதினை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் அடியோடு நீங்கிவிடும்.

* உடலுக்கு புத்துணர்ச்சியை தருவதோடு கண் பார்வையை அதிகரித்து, தோல் பாதிப்படையாமல் பளபளப்பாக்கும்.

* மன அழுத்தம், மன அமைதியின்மை, மூளைச்சோர்வு குறையும். கர்ப்பிணிப் பெண்களும், தாய்ப்பால் கொடுப்போரும் இப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால் குழந்தையின் வளர்ச்சி நன்றாக இருப்பதுடன் நல்ல சக்தியும், நுண்ணூட்டமும் அதிகம் கிடைப்பதோடு, சருமமும், கேசமும் மின்னும்.

* தூக்கத்திற்கு அருமருந்து.

தொகுப்பு: ச.லெட்சுமி, செங்கோட்டை.

 

Related posts

புது அம்மா to Fit அம்மா

மூளையின் முடிச்சுகள் தன்னுயிர் நீத்தல்!

மருத்துவர் கார்த்திகேயன்