ரிசர்வேசன் பெட்டிக்குள் நுழைந்து வடமாநில பயணிகள் அட்டூழியம்.. அபாய சங்கிலியை இழுத்த `கோவை’ பெண்.. ஜோலார்பேட்டையில் பரபரப்பு..!!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்த பெட்டியில் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்ததால் பயணிகள் அவதியுற்றனர். நேற்று இரவு கோச்சியில் இருந்து கோராப்பூர் வரை செல்லும் ரப்திசாகர் ரயில் நேற்று கோவையில் இருந்து விஜயவாடா செல்வதற்காக புறப்பட்டது. அப்போது, கோவையில் இருந்து சதீஷ்குமார் என்ற பயணி தனது சகோதரிகளுடன் முன்பதிவு ரயில் பெட்டியில் ஏறியுள்ளார். இதனிடையே முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டியில் வடமாநிலத்தை சேர்ந்த கட்டுக்கடங்காத பயணிகள் பயணித்துள்ளனர்.

இதனால் முன்பதிவு செய்த பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். சுமார் 8 மணியளவில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு அந்த ரயில் வந்தடைந்தது. அச்சமயம் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்திய ரயில் பயணிகள், காவல்துறை மற்றும் ரயில்வே துறையிடம் முறையிட்டனர். கட்டுக்கடங்காத கூட்டம் இருந்ததால் கழிவறை கூட செல்லமுடியாமல் தவித்ததாக முன்பதிவு செய்த ரயில் பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

உடனடியாக விரைந்த ரயில்வே துறையினர், முன்பதிவு பெட்டி (s3) கழிவறையில் இருந்த பயணிகளை அப்புறப்படுத்திவிட்டு பெண் பயணிகளை கழிவறைக்கு அனுப்பியுள்ளனர். இதேபோல் எஸ்1, எஸ்2, எஸ்3 முன்பதிவு பெட்டிகளில் பதிவு செய்யாத பயணிகளை போலீசார் அப்புறப்படுத்தினர். கட்டுக்கடங்காத கூட்டம் இருந்ததால், டிக்கெட் பரிசோதகர் வரவில்லை எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அபாய சங்கிலி பிடித்து இழுக்கப்பட்டதால் ரப்திசாகர் ரயில் 15 நிமிடம் தாமதமாக புறப்பட்டது.

Related posts

பெற்றோரை திருமணமான அரசு ஊழியரின் காப்பீட்டு திட்டத்தில் குடும்ப உறுப்பினராக சேர்ப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கள்ளச்சாராயத்தை ஒழிக்க கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்: ஆயுள்தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.320 உயர்ந்தது