முக்கூடல் அருகே வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட ஆண் சடலம் மீட்பு

*போலீசார் விசாரணை

பாப்பாக்குடி : முக்கூடல் அருகே வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தென்மாவட்டங்களில் கடந்த 17ம் தேதி பெய்த தொடர் கனமழையால் நெல்லை மாவட்டத்தின் பிரதான அணைகளான மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு ஆகிய அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டது. இதன் காரணமாக முக்கூடல் அடுத்த பாப்பாக்குடி நொச்சிக்குளத்தில் மறுகால் பாயந்தது.

இதனால் முக்கூடல் – துலுக்கப்பட்டி, பாப்பாக்குடி – துலுக்கப்பட்டி போன்ற சாலைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. வெள்ளம் குறைந்த நிலையில் நான்காவது நாளான நேற்று ஊடகரை துலுக்கப்பட்டி அருகே உள்ள வெள்ள நீர் ஓடையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதாக பாப்பாக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பாப்பாகுடி போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? எப்படி இறந்தார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாகவே வெள்ளத்தில் சிக்கி இறந்தது தெரிய வந்ததுள்ளது.

Related posts

அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் முத்தமிழ் முருகன் மாநாடு ஆலோசனை கூட்டம்

தங்க கடத்தல்: மேலும் 2 கடைகளில் சோதனை நடத்த முடிவு

நாடாளுமன்றத்தில் பொய் தகவல்களை பிரதமர் மோடி கூறுகிறார்: திமுக எம்.பி. திருச்சி சிவா குற்றச்சாட்டு