கட்டுமான தொழில் கடும் பாதிப்பு: கல்குவாரிகளை திறக்க முதல்வருக்கு கோரிக்கை

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஆர்.முனிரத்தினம் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் சுமார் 2500 கல் குவாரிகள், 3000 கிரஷர்கள் இயங்கவில்லை. இதனால் 55,000 லாரிகள் இயங்கவில்லை. கட்டுமான தொழில்கள் முடங்கியுள்ளன. குறிப்பாக சென்னையில் அதிகளவில் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ சிஎம்ஆர்எல் பணிகள், குடிசை மாற்று வாரிய பணிகள், தனியார் கட்டுமான நிறுவனங்கள், பொதுமக்கள் வீடு கட்டும் திட்டங்கள், கருங்கள் ஜல்லி, எம்-சாண்ட் கிடைக்காமல் தங்களது வேலைகளை நிறுத்தி உள்ளனர்.

இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே முதல்வர் மு.க.ஸ்டாலின், கல் குவாரி உரிமையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து தமிழகம் முழுவதும் கல்குவாரிகளை இயக்க ஆவன செய்ய வேண்டும். இல்லையென்றால் 55,000 லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்கள், 30,00,000 கட்டுமான தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இதனால் தமிழக அரசுக்கு கடுமையான வருவாய் இழப்பு ஏற்படும்.

Related posts

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டையொட்டி சென்னை மெரினாவில் இன்று சாகச நிகழ்ச்சி

அக்-06: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!