குளத்தை சீரமைத்து வேலி அமைக்க கோரிக்கை

ஊத்துக்கோட்டை: எல்லம்பேட்டை கிராமத்தில் மாசடைந்த குளத்தை சீரமைத்து சுற்றி வேலி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே பேரண்டூர் ஊராட்சியில் எல்லம்பேட்டை கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். கிராமத்தில் காலனி பகுதியில் குடிநீர் குளம் உள்ளது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த குளத்தை சுமார் 60 வருடங்களுக்கு முன்பு இப்பகுதி மக்கள் குடிநீர் குளமாக பயன்படுத்தி வந்தனர்.

ஆனால் தற்போது இந்த குளத்தை சுற்றி புதர்கள் மண்டி செடி, கொடிகள் படர்ந்துள்ளது. மேலும் வீடுகளில் இருந்து வெளியேரும் கழிவுநீர் இந்த குளத்தில் கலக்கிறது. சிலர் குப்பைகளை இந்த குளத்தின் அருகிலேயே கொட்டுகிறார்கள். இதனால் இந்த குளம் கழிவுநீர் குளமாக மாறிவிட்டது. தற்போது குளத்தில் தண்ணீர் பச்சை நிறத்தில் மாறியுள்ளது. எனவே மாசடைந்த இந்த குளத்தை சீரமைத்து, கரையை பலப்படுத்தி, வேலி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related posts

வங்கக்கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு