பருவமழை துவங்குவதற்கு முன்பாக புழல் ஏரி கால்வாய் கரையை சரிசெய்ய மக்கள் கோரிக்கை

புழல்: சென்னை கொரட்டூர் ஏரியில் இருந்து செல்லும் உபரிநீர் கால்வாய் புழல் அடுத்த கதிர்வேடு பத்மாவதி நகர் வழியாக மாதவரம், ரெட்டேரிக்கு செல்கிறது. இந்த கால்வாயில் மழைக்காலத்தின்போது தண்ணீர் பெருக்கெடுத்து செல்லும்போது மக்கள் பாதிக்கப்படுகின்றனர். கடந்தாண்டு பருவமழை பெய்தபோது கதிர்வேடு சர்வீஸ் சாலை பத்மாவதி நகர் அருகே உபரிநீர் கால்வாய் தடுப்புச்சுவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் பத்மாவதி நகர், வீரராகவவலு நகர், லிட்டில் அவென்யூ, பாபுஜி நகர், கேஆர்.விநகர், பாலாஜி நகர் மற்றும் லட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உபரி நீர் புகுந்ததால் இடுப்பளவில் தண்ணீர் தேங்கியது. இதன்காரணமாக 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், வருகின்ற பருவ மழைக்கு முன்பாக கால்வாய் கரைப்பகுதிகளில் நிரந்தரமாக தடுப்புகளை அமைக்க வேண்டும் என்று மாதவரம் மண்டலம் 31வது வார்டு கவுன்சிலர் சங்கீதாபாபு, நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருள்மொழியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளார். ‘’நீர்வளத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து உடைப்பு ஏற்பட்டுள்ள கரை பகுதிகளை சரி செய்யவேண்டும்’’ என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் வினாடி-வினா போட்டி: வரும் 9ம் தேதி தொடக்கம்

சூர‌ஜ் ரேவண்ணாவுக்கு 18ம் தேதி வரை காவல்