தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள அலங்கார மாதிரிகளை அகற்ற கோரிக்கை

ஊட்டி : தாவரவியல் பூங்காவில் உள்ள புல் மைதானங்களில் வைக்கப்பட்டுள்ள அலங்கார மாதிரிகளை அகற்ற வேண்டும் என சுற்றுலா அலுவலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மே மாதம் மலர் கண் கட்சி நடந்தது. இந்த மலர்க்கண்காட்சிக்காக பூங்கா புல் மைதானத்தில் பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டன.

பிரம்மாண்ட டிஸ்னி வோல்ட் மாதிரியும், ஊட்டி மலை ரயில் மாதிரியும் அமைக்கப்பட்டது. பல லட்சம் மலர்களைக் கொண்டு இந்த இரு மலர் அலங்காரங்களும் செய்யப்பட்டன. இந்த மலர் ஜூன் மாதம் வரை வைக்கப்பட்டிருந்தது. ஜூன் மாதம் இறுதி வாரத்திற்கு மேல் அந்த மலர் அலங்காரங்கள் அகற்றப்பட்டன.

ஆனால், மலர் கண்காட்சி முடிந்து 4 மாதங்களுக்கு மேல் ஆன நிலையில், மலர் அலங்காரங்கள் மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட பிரம்மண்ட இரும்புகளால் ஆன மாதிரிகள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது.

இது அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் இந்த இரும்பு மாதிரிகள் இடையூறாக உள்ளது. எனவே, இந்த இரும்பு மாதிரிகளை அகற்ற உடனடியாக பூங்கா நிர்வாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, பெரணி இல்லம் அருகே அமைக்கப்பட்டுள்ள மலை ரயிலில் மாதிரியை அகற்ற வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு