குரூப்-1 தேர்வை ரத்து செய்யக் கோரிய வழக்கில் சீலிட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை

மதுரை: குரூப்-1 தேர்வை ரத்து செய்யக் கோரிய வழக்கில் சீலிட்ட கவரில் லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல் செய்தது. 2019-ல் குரூப்-1 தேர்வில் தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான 20% இடஒதுக்கீட்டு சலுகையில் முறைகேடு என வழக்கு தொடர்ந்தனர். தமிழ் வழி கல்வியில் பயின்றதாக போலி சான்று அளித்த 5 பேர் கண்டறியப்பட்டுள்ளதாக காமராஜர் பல்கலை. தரப்பு அறிக்கை சமர்ப்பித்தது. இதே போல் அனைத்து பல்கலைக்கழங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தலாமே என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளது. மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சக்திராவ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Related posts

விஷச் சாராய வழக்கு: 9 பேரிடம் விசாரணை

நீட் முறைகேடு – நாடாளுமன்றம் முன் இன்று போராட்டம்

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்: வரும் 5ம் தேதி போராட்டம் நடத்த முடிவு