பொது இடங்களில் பாலின சார்பற்ற கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: பொது இடங்களில் பாலின சார்பற்ற கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 3-ம் பாலினத்தவர்களுக்காக பாலின சார்பற்ற கழிப்பிடங்களை அமைக்க உத்தரவிடக் கோரி ஃபிரெட் ரோஜர்ஸ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.

அதில், ஏற்கனவே உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பிடங்கள் பாலின சார்பற்ற கழிப்பிடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. பாலின சார்பற்ற கழிப்பிடங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் சென்னை ஐகோர்ட்டில் அரசு தரப்பு விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் கழிப்பிடங்கள் குறித்து தமிழ்நாடுஅரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

 

Related posts

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை

ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா: முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார்