கர்நாடகாவில் இவிஎம் உடைக்கப்பட்ட சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் நாளை மறுவாக்குப்பதிவு


ஹனூர்: கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவின் மலைமாதேஸ்வரன் மலைப்பகுதியின் எல்லையில் உள்ள தேக்காணே, மெந்தாரே, இண்டிகநத்தா உள்ளிட்ட ஐந்து கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி தேர்தலை புறக்கணித்தனர். அப்போது, ஆத்திரமடைந்த கிராம மக்கள் வாக்குச்சாவடியில் இருந்த மேஜை, நாற்காலி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அடித்து உடைத்தனர்.

இந்தநிலையில், சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் இண்டிகநத்தா கிராமத்தில் உள்ள 146வது வாக்குச்சாவடியில் நாளை மறுவாக்குப்பதிவு நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று காலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை வாக்களிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு