இன்டர்சிட்டி எக்ஸ்பிரசில் மீண்டும் மீண்டும் புகை: 2 முறை நடுவழியில் நிறுத்தம்; பயணிகள் அச்சம்

மதுரை: திருச்சியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நேற்று காலை 7.20 மணிக்கு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு மதுரை வழியாக சென்று கொண்டிருந்தது. திருப்பரங்குன்றம் அருகே ரயிலின் பின்பகுதியில் இருந்து புகை அதிகளவில் வருவது தெரிந்தது. இதையடுத்து, கள்ளிக்குடி ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தினர். தகவலறிந்து வந்த ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் புகை வந்த கடைசிப் பெட்டியை ஆய்வு செய்தனர். புகையைக் கண்டு அச்சமடைந்த பயணிகள் பலரும் கீழே இறங்கி பிளாட்பாரத்தில் நின்றனர். ரயில்வே தொழில்நுட்ப அலுவலர்கள் ஆய்வு செய்ததில், ரயிலின் பிரேக் செயல் இழந்ததால் சக்கரங்கள் தண்டவாளத்தில் உரசியதால் ஏற்பட்ட புகை எனத் தெரிந்தது. இதனை சரி செய்தனர்.

சுமார் அரை மணிநேரத்திற்கு பின்னர் ரயில் புறப்பட்டு சென்றது. இந்நிலையில் சாத்தூருக்கு 8 கிலோ மீட்டருக்கு முன்பாக மீண்டும் ரயில் பெட்டியின் கீழ் பகுதியில் இருந்து அதிக புகை வெளியானதால் 2வது முறையாக நடுவழியில் நிறுத்தப்பட்டது. அங்கும் கோளாறு சரி செய்யப்பட்டு. ரயில் புறப்பட்டுச் சென்றது. ஓடும் ரயிலில் அடுத்தடுத்து புகை வந்ததால் ரயில் பயணிகள் அச்சத்துடன் பயணித்தனர்.

 

Related posts

பெரும்பாக்கம் அரசு கலை கல்லூரியில் நேரடி மாணவர் சேர்க்கை

வடகிழக்கு பருவ மழையின்போது மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி: பேரிடர் மேலாண்மை துறை திட்டம்

தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் தறிகெட்டு ஓடிய மாநகர பேருந்து மோதியதில் ஆட்டோ உருக்குலைந்தது; டிரைவர் நசுங்கி சாவு