பழுது நீக்கும் வாகனத்துக்கு சுங்கக்கட்டணம் விலக்கு..!!

டெல்லி: பழுது நீக்க பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு 20 கிலோ மீட்டர் தூரம் வரை சுங்கக்கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகள் சட்டத்தில் புதிய விதிகளை ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை சேர்த்துள்ளது. சாலையில் வாகனங்கள் பழுதானால் பழுது நீக்கும் வாகனங்கள் மூலம் பழுது பார்க்கும் நிலையம் கொண்டு செல்லப்படும். பழுது நீக்கும் வாகனங்களுக்கு இதுவரை சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Related posts

உணவுக்காக யானைகளை கொலை செய்ய ஜிம்பாப்வே அரசு திட்டம்!!

தி.மலையில் புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம்; அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் அலைமோதல்: 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல் செய்யுங்கள்: ரஷ்யா அதிபர் புதின் வலியுறுத்தல்