சேலத்தில் 450 துப்பாக்கிகள் பழுது நீக்கும் பணி துவக்கம்

சேலம்: ஆண்டுதோறும் காவல் துறை, சிறைத்துறை, வனத்துறையில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் ஆண்டுக்கு ஒருமுறை பழுது பார்த்து நீக்கப்படும். அதன்படி, சேலம் மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்கள், ஆத்தூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய சிறைகள், சேலம் வனமண்டலத்தில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் என சுமார் 450 துப்பாக்கிகள், குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் பழுது பார்த்து நீக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதற்காக சென்னை தளவாய் சிறுபடை களம் எஸ்பி ஜனகன், எஸ்ஐ முனியாண்டி தலைமையிலான குழுவினர் சேலம் வந்தனர்.

அவர்கள் துப்பாக்கிகளை பழுது நீக்கும் பணிகளில் ஈடுபட்டனர். மஸ்காட் 303, பிஸ்டல், ஏகே 47, கேஸ் கன் என 450 துப்பாக்கிகளில் பழுது நீக்கும் பணிகள் நடந்தது. நாளையும் இந்த பணிகள் நடைபெறுகிறது. அதனைதொடர்ந்து நாளை மறுநாள் மாநகரத்தில் உள்ள துப்பாக்கிகள் பழுது நீக்கும் பணி நடக்கிறது. ஆயுதப்படை டிஎஸ்பி சுப்பிரமணி, ஆர்ஐ ராஜ்குமார், எஸ்ஐ வெங்கடேசன் உள்ளிட்ட போலீசார் இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டையொட்டி சென்னை மெரினாவில் இன்று சாகச நிகழ்ச்சி

அக்-06: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!