பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம் பெரிய ஏரியில் சீரமைப்புப்பணி

* நடைபாதையுடன் கூடிய பூங்கா அமைக்க திட்டம்

பெரம்பலூர் : பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்டதுறைமங்கலம் பெரிய ஏரியில் ரூ.98லட்சம் மதிப்பில் சீரமைப்புப்பணிநடைபெற்று வருவதாகவும், இதில் சுற்றிலும் நடைபாதையுடன் கூடிய பூங்காஅமைக்கும் பணிகள் நீர்வளத்துறை செயற்பொறியாளர் வேல் முருகன் தெரிவித்துள்ளார்.பெரம்பலூர் மாவட்டத்தில் நீர்வளத்துறையின் கட்டுப் பாட்டில் 73-ஏரிகளும், விசு வக்குடி, கொட்டரை என 2 பெரிய நீர்த்தேக்கங்களும், 33- சிறிய அணைக்கட்டுக ளும் உள்ளன.

பெரம்பலூர் நகராட்சியில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ் சாலையின் மேற்குப் பகுதி யில், சாலையை ஒட்டியே அமைந்துள்ள துறைமங்கலம் பெரியஏரியும் இதில் ஒன்றாகும். இந்த ஏரிக்கு லாடபுரம் பெரிய ஏரி, லாட புரம் சின்னஏரி, குரும்பலூர் ஏரி, செஞ்சேரி ஏரி, அரணா ரை ஏரி, பெரம்பலூர் மேலேரி, கீழேரி எனப்படும் வெள்ளந்தாங்கியம்மன் கோவில்ஏரி ஆகிய ஏரிகளி லிருந்து வரத்துவாய்க்கால் களின் வாயிலாகவும், இதர நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்தும் தண்ணீர் வரப் பெறுகிறது. துறைமங்கலம் பெரிய ஏரி கரையின்நீளம் 1064 மீட்டர்.

ஏரியின் சுற்றளவு 5000 மீட் டர். இந்தஏரியில் இரண்டு பாசன மதகுகளும்,இரண்டு உபரிநீர் வழிந்தோடும் (16.25 மீட்டர், 5.75 மீட்டர் நீளம்) நீர்ப்போக்கியும் உள்ளது. ஏரியின் கொள்ளளவு 17.22 மில்லியன் கனஅடி ஆகும். ஏரியின் பரப்பளவு 48.50 ஹெக்டேர் ஆகும். இரண்டு பாசன மதகுகள் மூலம் 273.80 ஏக்கர் வேளாண் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

துறைமங்கலம் பெரிய ஏரியானது நகருக்கு மிக அருகாமையில் இருப்பதாலும், தேசிய நெடுஞ்சாலைக்கு மிகஅருகில் இருப்பதாலும், சுற்றுச்சூழல் பாது காப்பிற்காகவும், பொது மக்கள் பயன்பாட்டிற்காகவும், ஏரியில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றி, கரைகளை சீரமைத்து, நடைபாதையுடன் கூடிய பொழுது போக்குப் பூங்கா ரூ49லட்சத்தில் அமைப்ப தற்கு பெரம்பலூர் மாவட்ட நீர்வளத்துறையின் சார் பாக சில மாதங்களுக்கு முன்பாக பணிகள் தொடங்கின. நகரின் அழகு கூட்டப் படுவதுடன், ஆக்கிரமிப்பா ளர்கள் மீண்டும் ஏரிப்பகுதி களை ஆக்கிரமிப்பு செய் யாமல் இருக்கும்பொருட்டு இத்திட்டம் மிகஇன்றியமை யாததாக அமைந்துள்ளது.

இந்தத் திட்டத்திற்காக துறைமங்கலம் ஏரியின் மேற்குப்பகுதியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த வனம்போல் காணப்பட்ட சீமைக் கருவேல மரங்கள் அகற்றப் பட்டுள்ளன. இத னால் நடைபாதையை பயன்படுத்தும் நகரவாசி களுக்கு விஷ ஜந்துக்களி டம் இருந்து பாதிப்பு ஏற்ப டாதபடிக்கு அச்சமில்லாத சூழல்ஏற்படும். சீமைக் கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டு விட்டதால் தற்போது பாலக்கரையில் இருந்து கலெக்டர் அலுவல கம் செல்லும் சாலையில் இருந்து பார்த்தாலே, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன ங்கள் செல்வது எளிதாகத் தெரிகிறது. ரூ49லட்சத்தில் தொடங்கப்பட்ட திட்டத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கே பெரும்பா லான நிதிசெலவானதால், மாவட்ட நிர்வாகம் பரிந்து ரையின்படி, மேலும் ரூ 49 லட்சம் நிதிஒதுக்கீடு செய் யப்பட்டு, தற்போது மொத் தம் ரூ.98லட்சம் மதிப்பில் பணிகள் நடந்துவருகிறது.

இது குறித்து, பெரம்ப லூர் – அரியலூர் மாவட்டங் களுக்கான நீர்வளத்துறை செயற்பொறியாளர் வேல் முருகன் தெரிவித்திருப்ப தாவது: சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்ட துறைமங்கலம் ஏரியின் கரைகளில், முதல்கட்டமாக 500மீட்டர் நீளத்திற்கு பேவர் பிளாக் மூலம் நவீன நடை பாதைஅமைக்கும்பணிகள் நடைபெறவுள்ளன. இப் பணிகள் அடுத்தடுத்த நிதி ஒதுக்கீடு அடிப்படையில் விரிவு படுத்தப்பட்டு, துறை மங்கலம் ஏரியின் முழு சுற் றளவான 5 கிலோ மீட்டர் நீளத்திற்கும் இதேபோல் நடைபாதை அமைத்து கரைகளில் மரக்கன்றுகள், பூச்செடிகள் நட்டுவைத்து, பூங்கா அமைக்கவும் திட்ட மிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தால் துறைமங்கலம் ஏரிக்குள் நகராட்சிக் கழிவு நீர் கலப்பது தடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது