ரூ.30 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட கிண்டி சிறுவர் இயற்கை பூங்கா திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: கிண்டி சிறுவர் பூங்கா சென்னையிலுள்ள முக்கிய சுற்றுச்சூழல் சுற்றுலா தலங்களில் ஒன்று. ஆண்டுதோறும் 7 முதல் 8 லட்சம் பார்வையாளர்கள் வருகை தருகின்றனர். நூற்றுக்கணக்கான பள்ளிகளைச் சேர்ந்த 60,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பூங்காவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். வனம் மற்றும் வனவிலங்குகள் பற்றிய விழிப்புணர்வுவை சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு ஏற்படுத்துவதற்காக தற்போதுள்ள கிண்டி சிறுவர் பூங்கா புனரமைக்கப்பட்டுரூ.30 கோடி செலவில் சிறுவர்களுக்கு இயற்கை பூங்காவாக அமைக்கப்பட்டுள்ளதை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

இப்பூங்கா திறப்பு விழாவின்போது, வனவிலங்குகளை மீட்பதற்கும், வனப்பகுதிகளில் ஏற்படும் காட்டுத்தீ போன்ற விபத்துகளை தடுக்கும் பணிகளை மேற்கொள்வதற்காகவும் 9 நவீன அனைத்து நிலப்பரப்பு வாகனங்களையும் (All Terrain Vehicles) முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, இந்த பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள வேடந்தாங்கல் பறவைகள் இருப்பிடத்தை திறந்து வைத்து, பூங்காவில் ஏற்படுத்தப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பல்வேறு வசதிகளை அவர் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பொன்முடி, மா. சுப்பிரமணியன், மதிவேந்தன், மேயர் பிரியா, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., பிரபாகர ராஜா எம்எல்ஏ, துணை மேயர் மகேஷ் குமார், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் செந்தில் குமார், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை இயக்குநர் ராகுல் நாத் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related posts

கும்பகோணத்தில் ஓடும் பேருந்தில் நடத்துநர் மீது தாக்குதல் நடத்திய 3 இளைஞர்கள் கைது: சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் நடவடிக்கை

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி

ஜப்பானில் முதியோர்கள் எண்ணிக்கை புதிய உச்சம்