பெரும்பாலான வாகன உற்பத்தி நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் தீவிரமாக ஈடுபட திட்டமிட தொடங்கியுள்ளன. இந்த வகையில் ரெனால்ட் நிறுவனம் எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது. சமீபத்தில் ஜப்பானில் நடந்த ஆட்டோமொபைல் வாகன கண்காட்சியில், கார்டியான் எஸ்யுவி என்ற தனது முதலாவது எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்திருந்தது.
இது கிகர் எஸ்யுவியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இத்துடன் சேர்த்து இன்னும் 4 ஆண்டுகளில் இந்தியச் சந்தையில் 3 எலக்ட்ரிக் கார்களை சந்தைப்படுத்த இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.