மோவூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு நிவாரண உதவி

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த பூண்டி ஒன்றியம், மோவூர் ஊராட்சிக்கு உட்பட்ட கன்னியம்மா பேட்டை பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் மக்களுக்கு ஐஆர்சிடிஎஸ் தொண்டு நிறுவனம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் மிக்ஜாம் புயல் மழை கராணமாக கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

அதேபோல் பூண்டி ஒன்றியம், மோவூர் ஊராட்சி, கன்னியம்மன் நகரில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய பெரும் பாதிப்பின் விளைவாக பழங்குடியின மக்கள் அத்தியாவசிய தேவைகள் இன்றி மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அரிசி பருப்பு எண்ணெய், வாழைப்பழம் ஆகிய நிவாரணப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை ஐஆர்சிடிஎஸ் நிர்வாக இயக்குனர் பி.ஸ்டீபின் 25 குடும்பங்களுக்கு வழங்கினார்.

 

Related posts

சாலையோரம் மழைநீர் கால்வாயில் விழுந்த நபர் உயிரிழப்பு

புதிய அமைச்சராக செந்தில் பாலாஜி, சா.மு.நாசர், கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் பதவியேற்பு!

அமைச்சராக பதவியேற்ற 4 பேருக்கும் இலாக்கள் ஒதுக்கீடு