வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு 2 லாரிகளில் நிவாரண பொருள்: தாம்பரம் மாநகராட்சி சார்பில் அனுப்பி வைப்பு

தாம்பரம்: தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு, தாம்பரம் மாநகராட்சி சார்பில் 2 லாரிகளில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதிக கனமழை பெய்து வருவதால், சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் குடியிருப்பு பகுதிகள், சாலைகளில் மழைநீர் சூழ்ந்து வீடுகளில் உள்ளே தண்ணீர் புகுந்து பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர்.

இந்த, பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை மீட்க முயற்சியில் தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும், ரயில் போக்குவரத்து மற்றும் சாலை போக்குவரத்தில் தடை ஏற்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், பல்வேறு பகுதிகளில் இருந்து சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்படுகிறது.

இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தாம்பரம் மாநகராட்சி சார்பில், 2 லாரிகளில் 13,160 பிரட் பாக்கெட்டுகள், 62,211 பிஸ்கட் பாக்கெட்டுகள், 654 ரஸ்க் பாக்கெட்டுகள், 1,500 ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில்கள், 3,070 அரை லிட்டர் தண்ணீர் பாட்டில்கள், 2,230, 300எம்எல் தண்ணீர் பாட்டில்கள், 75 கிலோ அரிசி 1 மூட்டை, 26 கிலோ அரிசி 9 மூட்டைகள், 5 கிலோ அரிசி 53 மூட்டைகள், 3 கிலோ அரிசி 33 மூட்டைகள்,

1 லிட்டர் சமையல் எண்ணெய் 58 பாக்கெட்டுகள், அரை லிட்டர் சமையல் எண்ணெய் 200 பாக்கெட்டுகள், 5 கிலோ கோதுமை மாவு 104 பாக்கெட்டுகள், அரை கிலோ ரவை 760 பாக்கெட்டுகள், அரை கிலோ பால் பவுடர் 100 பாக்கெட்டுகள், ஒரு கிலோ சேமியா 1,674 பாக்கெட்டுகள், நூடுல்ஸ் 600 பாக்கெட்டுகள், 163 பெட்ஷீட்கள், 600 நாப்கின்கள், 30 புடவைகள், மளிகை பொருட்கள் 400 பைகள், 30 மேட்கள் போன்ற வெள்ள நிவாரண பொருட்களை அனுப்பி வைக்கப்பட்டது.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்