நாடாளுமன்ற தேர்தல் பாஜ பட்டியல் வௌியீடு தமிழ்நாடு பொறுப்பாளராக அரவிந்த் மேனன் நியமனம்

புதுடெல்லி: மக்களவை தேர்தலையொட்டி மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான பாஜ தேர்தல் பொறுப்பாளர்கள் பட்டியல் வௌியிடப்பட்டுள்ளது. ஒன்றியத்தில் தற்போதுள்ள மோடி தலைமையிலான பாஜ அரசின் பதவிக்காலம் வரும் ஜூன் 16ம் தேதியுடன் முடிவடையவுள்ளதால், ஏப்ரல் அல்லது மே மாதத்தில் மக்களவை தேர்தல் நடைபெறும். இதற்கான அறிவிப்பு மார்ச் மாதம் வௌியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து தேர்தல் முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சிகளும் முடுக்கி விட்டுள்ளன. அதன்ஒரு பகுதியாக 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்கள், இணை பொறுப்பாளர்களை பாஜ நியமித்துள்ளது.

இதுகுறித்து பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று வௌியிட்ட அறிவிப்பு: தமிழ்நாட்டின் தேர்தல் பொறுப்பாளராக பாஜ தேசிய செயலாளர் அரவிந்த் மேனன், இணைபொறுப்பாளராக சுதாகர் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளனர். கேரளா பொறுப்பாளராக பாஜ மூத்த தலைவரும், ஒன்றிய முன்னாள் அமைச்சருமான பிரகாஷ் ஜவ்டேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடக பொறுப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் ராதா மோகன் தாஸ் அகர்வாலும், இணைபொறுப்பாளராக சுதாகர் ரெட்டியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதுவை யூனியன் பிரதேசத்துக்கு நிர்மல் குமார் சுரானா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பீகார் பொறுப்பாளராக பாஜ தேசிய பொதுசெயலாளர் விநோத் தாவ்டே, இணைபொறுப்பாளராக ஜார்க்கண்ட் பாஜ முன்னாள் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான தீபக் பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், அருணாச்சலபிரதேசம், இமாச்சலபிரதேசம், ஒடிசா, பஞ்சாப், ஜார்க்கண்ட், உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர், அரியானா, கோவா, சண்டிகர், அந்தமான்-நிக்கோபார், டாமன் டையூ, லடாக், லட்சத்தீவு ஆகியவற்றுக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள், இணைபொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கள்ளக்குறிச்சி மாவட்டம்: வடதொரசலூரில் சிறுவர்கள், சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு!

திருப்புத்தூர் அருகே காய்கறி வேன் கவிழ்ந்து விபத்து: டிரைவர், கிளீனர் படுகாயம்

ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்களிடம் ‘கூகுள் லொகேஷன்’ கேட்க கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு