ஒன்றிய அரசின் புதிய காலண்டர் வெளியீடு

புதுடெல்லி: ‘நமது லட்சியம், வளர்ச்சி அடைந்த பாரதம்’ என்ற கருப்பொருளுடன், 2024ம் ஆண்டிற்கான ஒன்றிய அரசின் காலண்டர் நேற்று வெளியிடப்பட்டது. இதை வெளியிட்ட ஒன்றிய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், ‘‘பிரதமர் மோடியின் தொலைநோக்கு ஆட்சியில் மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள சிறந்த, கலாச்சார மற்றும் பொருளாதார மாற்றத்தை 2024 காலண்டர் சித்தரிக்கிறது. அரசின் எண்ணற்ற சாதனைகள், அதுதொடர்பான படங்கள் காலண்டரில் இடம் பெற்றுள்ளன. வெளிப்படைத்தன்மையும், பொறுப்புணர்வும் பாஜ அரசின் குறிக்கோளாகும். இந்த நெறிமுறைதான், ஒருகாலத்தில் பலவீனமாக இருந்த இந்திய பொருளாதாரத்தை இன்று உலகின் 5 பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக வளர்ச்சி அடைய செய்துள்ளது’’ என்றார்.

Related posts

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சொல்லிட்டாங்க…

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா