நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவர்களிடம் தவறாக நடக்கக்கூடாது: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அறிவுரை

புதுடெல்லி: டெல்லியில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மருத்துவ அறிவியல் நிறுவனம், ஆர்எம்எல் மருத்துவமனையில் நடந்த 10வது பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டார். விழாவில் பேசிய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கூறுகையில்,\\” நோயாளிகளின் உயிரை காப்பாற்றுவதற்கு மருத்துவர்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கின்றனர். இது கொரோனா தொற்று காலங்களில் புரிந்துகொள்ளப்பட்டது. பல நேரங்களில் நோயாளிகளுக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் ஆத்திரத்தில் நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவர்களிடம் தவறாக நடந்து கொள்கிறார்கள். இது தவறானது, கண்டிக்கத்தக்கது. எந்த மருத்துவரும் நோயாளிக்கு தீங்கு விளைவிப்பதற்கு விரும்புவதில்லை. ஆனால் பல நேரங்களில் அனைத்து தீர்வுகளும் அறிவியலில் கிடைப்பதில்லை. மருத்துவர்கள் அழுத்தம் மற்றும் மன அழுத்தத்தின் சூழலில் வேலை செய்கிறார்கள். சில நேரங்களில் அவர்கள் அமைதியற்றவர்கள் போன்று தோன்றக்கூடும். ஆனால் அவர்கள் தங்களது நோயாளியைப்பற்றி தீவிரமாக கருதவில்லை என்று அர்த்தமல்ல. கொரோனா தொற்றுக்காலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் சேவை செய்தது நினைவுகூறவேண்டும்” என்றார்.

Related posts

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்லுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ.48 உயர்ந்து ரூ.1,903-க்கு விற்பனை

அக்.01: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!