திருமலை தேவஸ்தான ஆண்டு வருவாயில் திருப்பதி மாநகராட்சிக்கு 1 சதவீதம் வழங்கும் முடிவு நிராகரிப்பு: ஆந்திர அரசு அதிரடி

திருமலை: திருப்பதி மாநகராட்சிக்கு தேவஸ்தான ஆண்டு வருவாயில் 1 சதவீதம் வழங்கும் முடிவை ஆந்திர அரசு நிராகரித்துள்ளது. திருப்பதி வருடாந்திர வருவாயில் ஓரு சதவீதத்தை திருப்பதி மாநகர வளர்ச்சிக்கு வழங்க திருப்பதி தேவஸ்தானம் விரும்பியது. அறங்காவலர் குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பான அறிக்கையை ஆந்திர அரசுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் இதற்கு தெலுங்கு தேசம், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

பக்தர்கள் மூலம் கிடைக்கும் வருவாயை கோயில் பணிகள், சமூக நல பயன்பாடு, ஆன்மிகம், சனாதன வளர்ச்சி ஆகியவற்றுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் ஆந்திர மாநில இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், `திருப்பதி மாநகர வளர்ச்சிக்கு ஆண்டுதோறும் தேவஸ்தானம் சார்பில் ஒரு சதவீத நிதியை வழங்குவதாக அறிவித்த முடிவை ஆந்திர அரசு நிராகரிக்கிறது’ என தெரிவித்துள்ளது. திருப்பதி தேவஸ்தானம் தனி நிர்வாக குழு என்றாலும் தேவஸ்தானம் எடுக்கும் எந்த ஒரு முடிவுக்கும் ஆந்திர மாநில அரசு அனுமதி அளித்தால் மட்டுமே செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

விஷச் சாராய வழக்கு: 9 பேரிடம் விசாரணை

நீட் முறைகேடு – நாடாளுமன்றம் முன் இன்று போராட்டம்

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்: வரும் 5ம் தேதி போராட்டம் நடத்த முடிவு