ராஜிவ்காந்தி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்பு தானம் மூலம் 5 நபர்களுக்கு மறுவாழ்வு

சென்னை: சென்னை அரசு ராஜிவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த 20 வயது இளைஞரின் உடல் உறுப்பு தானம் மூலம் 5 நபர்கள் மறுவாழ்வு அடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த புவனேஸ்வரன் 20 வயதான கல்லூரி படிக்கும் இளைஞர் குடும்ப நிகழ்ச்சியில் சென்று விட்டு வீடு திரும்பி கொண்டே இருக்கும்போது சாலை விபத்து ஏற்பட்டது. சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இளைஞரை பரிசோதித்த நரம்பியல் மருத்துவர்கள் இளைஞர் மூளை சாவடைந்ததை உறுதிப்படுத்தினர். இதனை தொடந்து இளைஞர் குடும்பத்தினர் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்தனர். அதன் அடிப்படையில் இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு அவை 5 நபர்களுக்கு பொருத்தப்பட்டு மறுவாழ்வு வழங்கப்பட்டுள்ளது. உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய இளைஞரின் உடலுக்கு சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை டீன் தேரணிராஜம், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் என அனைவரும் வரிசையாக நின்று இளைஞரின் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து ராஜிவ்காந்தி மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: உடல் உறுப்பு தானத்தின் காரணமாக இளைஞரின் சிறுநீரகம், கல்லீரல், கண்விழி மற்றும் எலும்பு ஆகியவை தானமாக பெறப்பட்டு அவை பாதிக்கப்பட்டவருக்கு பொருத்தப்பட்டு 5 நபர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் முதல் இன்று வரை சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 20 நபர்களுக்கு உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டுள்ளது.

உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்த குடும்பத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். தலைக்கவசம்தான் நம் உயிரை காப்பாற்றும். அனைவரும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என உயிரிழந்த இளைஞர் குடும்பத்தினர் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்