நாளை ஆடிப்பெருக்கு பதிவு அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும்


சென்னை: ஆடிப்பெருக்கை ஒட்டி பதிவு அலுவலகங்கள் நாளை வழக்கம்போல் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: அசையா சொத்து குறித்த ஆவணப் பதிவுகளை மங்களகரமான நாளில் மேற்கொள்ள பொதுமக்கள் விரும்புவார்கள் என்பதால் பொது விடுமுறை நாளான 3ம் தேதி (சனிக்கிழமை) அன்று ஆடிப்பெருக்கு நாளில் ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள பதிவு அலுவலகங்களை காலை 10 மணி முதல் செயல்பாட்டில் வைத்திட அனைத்து பதிவு அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேற்குறிப்பிடும் விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு விடுமுறை நாள் ஆவணப் பதிவிற்கான கட்டணமும் சேர்த்து வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் உயர்கல்வியில் தரம் சரியில்லை என ஆளுநர் கூறியதற்கு அமைச்சர் பொன்முடி பதிலடி

மகாவிஷ்ணு விவகாரத்தில் நாளை மறுநாள் அறிக்கை தாக்கல் செய்யப்படும்: பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் தகவல்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 1556 கிலோ கெட்டு போன இறைச்சி பறிமுதல்