தனது 3வது ஆட்சிகாலத்தில் இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும்: பிரதமர் மோடி நம்பிக்கை

புதுடெல்லி: விக்சித் பாரத்தை நோக்கிய பயணம் என்ற தலைப்பில் சிஐஐ பட்ஜெட்டுக்கு பிந்தைய மாநாடு டெல்லியில் நடைபெற்றது.  இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது, ஒன்றிய அரசு அரசியல் நோக்கம் இல்லாதது. நாடு தான் முதல் அணுகுமுறை என்பதை மனதில் வைத்து அனைத்து முடிவுகளையும் அரசு எடுக்கும்.

இந்தியா 8 சதவீத வளர்ச்சியில் உள்ளது. தற்போது ஐந்தாவது இடத்தில் இருந்து மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும்.  இந்த சாதனையை இந்த மூன்றாவது ஆட்சிகாலத்தில் அடையமுடியும் என்று நம்புகிறேன். உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு ஆர்வமாக இருக்கிறார்கள் என்றார்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்