கதர் கிராமத் தொழில் வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் ஆய்வு!

சென்னை: கதர் கிராமத் தொழில் வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது சீரிய தலைமையில் இயங்கும் இவ்வரசில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். நடைமுறையில் உள்ள அறிவிப்புகளின் நன்மைகள் குறித்தும், நிலுவையில் உள்ள அறிவிப்புகளை விரைந்து முடித்திடவும் அறிவுறுத்தினார்கள். வாரியப் பொருட்கள் தரமாக உள்ளதை கருத்திற்கொண்டு இதனை மக்களிடையே பிரப்பலப்படுத்தி விற்பனையினை அதிகரிக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்கள்.

இக்குறளக கட்டடத்தினை அகற்றி புதிய நவீன பன்னடுக்கு கட்டடமாக அறிவிக்கப்பட்டதைத் செயல்படுத்திட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்கள். புதிதாக பொறுபேற்றிருக்கும் வாரியத்தின் தலைமைச் செயல் அலுவலர் அவர்கள் வியாபார அபிவிருத்திற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை பாராட்டியதோடு அதனை விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்கள். இவ்வாரியத்தில் தற்சமயம் குறைந்த பணியாளர்கள் பணியாற்றுவதை கருத்தில் கொண்டு பணியில் உள்ளோர்கள் சிரமமான சூழ்நிலை இருந்தாலும் அதனை நேர்மறையான அணுகுமுறை கையாண்டு வாரிய வருவாயினை அதிகரிக்கக்கூடிய வகையில் பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டார்கள்.

வாரிய அமைச்சர் என்ற முறையில் இவ்வாரியத்தின் நலனுக்காகத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளதாக தெரிவித்தார்கள். சென்ற வருடங்களைக் காட்டிலும், இந்நிதியாண்டில் கதர், கிராமப்பொருட்கள், பனைப்பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிக்க போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு இலக்கினை அடைந்திட அறிவுறுத்தினார்கள். மேலும், வரும் தீபாவளி போன்ற விழாக்காலங்களில் மக்களுக்குத் தேவைப்படுவதை முன்னரே கண்டறிந்து, நவீன காலத்திற்கேற்றவாறு யுக்திகளை கையாண்டு தரமான பொருட்களை விற்பனைக்கு கொண்டுவரவும் அறிவுறுத்தினார்கள். இக்கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் இ.ஆ.ப, தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய தலைமைச் செயல் அலுவலர் முனைவர் சீ.சுரேஷ்குமார் இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கி கூறினார்கள். வாரியத்தின் இதர உயர் அலுவலர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

Related posts

அரசு ஒதுக்கும் இடத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்க செய்ய உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தல்

ஒசூரில் தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து 14.5 லட்சம் கொள்ளை!

சென்னை பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் அஞ்சலி