செம்பரம்பாக்கம் ஏரிக்கு மீண்டும் நீர்வரத்து: சென்னையின் முக்கிய 5 ஏரிகளில் 40.45% நீர் இருப்பு

சென்னை: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு மீண்டும் 310 கனஅடி நீர் வர தொடங்கியது. 3645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு 1502 மில்லியன் கனஅடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 109 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

புழல் ஏரிக்கு நீர்வரத்து 77 கனஅடியில் இருந்து 204 கனஅடியாக அதிகரிப்பு. நீர்இருப்பு 2682 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 184 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 130 மில்லியன் கனஅடியாக உள்ளது. சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 20 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 315 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 15 கன அடியாக சரிந்துள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 40.45% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் – 41.21%, புழல் – 81.27%, பூண்டி – 3.93%, சோழவரம் – 12.02%, கண்ணன்கோட்டை – 63% நீர் இருப்பு உள்ளது.

Related posts

தலைசிறந்த தமிழ்நாடாக நாம் தலைநிமிர்ந்து நடைபோட வித்திட்டவர் அண்ணா: முதலமைச்சர் புகழாரம்

திமுக பவளவிழா இலச்சினையை திறந்து வைத்தார் முதலமைச்சர்!

மாட்டு வண்டி பந்தயத்தில் அதிர்ச்சி: காளைகள் மிதித்து தொழிலாளி பலி