உணவு, உர மானியம் ரூ.32,000 கோடி குறைப்பு: ஏழைகள் விவசாயிகள் அதிர்ச்சி

அறிவிப்பு: 2024-25ம் நிதியாண்டில் உணவு மானியத்துக்கு ரூ.2.05 லட்சம் கோடியும், உர மானியத்துக்கு ரூ.1.64 லட்சம் கோடி ஒதுக்கீடு. நடந்தவை: இந்த பட்ஜெட்டில் உணவு, உர மானியம் ரூ.32 ஆயிரம் கோடி வரை குறைக்கப்பட்டுள்ளது என்பதுதான் மறைந்துள்ள தகவல். நடப்பு நிதியாண்டில் வழங்கப்பட்ட உணவு மானிய தொகை ரூ.2.12 லட்சம் கோடி. இதைவிட ரூ.7 ஆயிரம் கோடி மானியம் இந்த ஆண்டு குறைக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் 1.89 லட்சம் கோடி ரூபாயாக இருந்த உர மானியம் அடுத்த நிதியாண்டில் 1.64 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது ரூ.25 ஆயிரம் கோடி மானியம் குறைக்கப்பட்டுள்ளது. விளைவு: உணவு மானியம் குறைக்கப்பட்டுள்ளதால் ரேஷனில் வழங்கப்படும் உணவு தானியங்கள் குறைக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இது ரேஷன் பொருளை நம்பி உள்ள ஏழை, நடுத்தர குடும்பங்களை பாதிக்கும். அதே போல், உர மானியம் குறைப்பால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related posts

அமலாக்கத்துறை சம்மனுக்கு எதிராக மம்தாவின் மருமகன் தொடர்ந்த மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த 4 சென்னை இளைஞர்களின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு: ஒருவரின் சடலத்தை தேடும் பணி தீவிரம்

ஆதிதிராவிடர் மாணவர் விடுதி விவகாரம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கயல்விழி பதிலடி