கொட்டும் மழை.. செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 22 அடியை தாண்டியது.. புழல் ஏரிக்கு நீர்வரத்து கிடுகிடு உயர்வு!!

சென்னை : சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையால் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. செம்பரம்பாக்கம் உள்பட 5 ஏரிகளில் 74.9% நீர் இருப்பு உள்ளது. 5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டிஎம்சியில், தற்போது 8.806 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.

*செம்பரம்பாக்கம் – 85.87%
*புழல் – 83.18%
*பூண்டி – 57.63%
*சோழவரம் – 58.83%
*கண்ணன்கோட்டை – 86.6%

நீர்வரத்து அதிகரிப்பால் செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 24 அடியில் 22 அடியை நீர்மட்டம் தாண்டியது.செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 278 கன அடியில் இருந்து 440 கன அடியாக அதிகரித்துள்ளது.நீர்வரத்து அதிகரித்துள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 3,130 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 25 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

தொடர் மழையால் புழல் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 62 கன அடியில் இருந்து 606 கன அடியாக உயர்ந்துள்ளது.3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2,745 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. புழல் ஏரியில் இருந்து சென்னை குடிநீர் தேவைக்காக 159 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 99 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன.பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் 99 ஏரிகள் முழு கொள்ளளவு எட்டி உள்ளன.மேலும் 149 ஏரிகளில் 75%க்கும் மேல் தண்ணீர் இருப்பு உள்ளது. தொடர் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

Related posts

மெரினாவில் நாளை விமான சாகச நிகழ்ச்சி: போக்குவரத்து மாற்றம்

அதானி குழுமம் தொடர்பான பங்குச்சந்தை முறைகேடு: செபி தலைவர் மாதவி ஆஜராக சம்மன்

முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் சகோதரிகள் கைது