பர்கினோ பாசோவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சி; 56 குழந்தைகள் உள்பட 223 பேரை சுட்டுக்கொன்ற ராணுவம்

ஒவ்கடங்கு: பர்கினோ பாசோவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டதாக 56 குழந்தைகள் உள்பட 223 பேரை ராணுவம் சுட்டுக்கொன்றது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடான பர்கினோ பாசோவில் உள்ள குறிப்பிட்ட சில கிராமங்களில் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் மற்றும் கிளர்ச்சிக்கான திட்டங்களை நடத்த போராட்ட குழுவினர் திட்டமிடுவதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு ராணுவ வீரர்கள் விரைந்தனர்.

அங்கு சந்தேகத்திற்குள்ளான நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி நான்டின் மற்றும் சோரா கிராமங்களில் அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டதாக கூறி 56 குழந்தைகள் உள்பட 223 பேரை அந்த நாட்டின் ராணுவம் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இந்த மனித உரிமைகளை மீறிய பயங்கரவாத தாக்குதல் குறித்து மனித உரிமைகள் ஆணையம் உள்பட சர்வதேச நிறுவனங்கள் விசாரணை நடத்த உள்ளன.

 

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி