மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க நாங்கள் தயார்: மல்லிகார்ஜுன கார்கே பேட்டி!

டெல்லி: மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க நாங்கள் தயார், ஆனால் பிரதமர் மோடி இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். மணிப்பூரில் குகி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்களை மெய்தே இனத்தைச் சேர்ந்த கும்பல் நிர்வாணமாக இழுத்துச் சென்று பாலியல் வண்புணர்வு செய்யும் வீடியோ வெளியாகி, நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஹேராதாஸ் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மணிப்பூர் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.

மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மழைக்கால கூட்டத்தொடரின் இரண்டு நாட்களும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று மூன்றாவது நாள் அவை தொடங்கிய நிலையில், அதே விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்துள்ள எதிர்க்கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாங்கள் விவாதத்திற்கு தயார், ஆனால் 140 கோடி மக்களின் தலைவரான பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வெளியே பேசியதை போல், மக்கள் பிரதிநிதிகள் அமர்ந்திருக்கும் நாடாளுமன்றத்திற்குள் மணிப்பூர் விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். மணிப்பூர் நிலை என்ன என்பது குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், மணிப்பூர் வன்முறை குறித்து விரிவான அறிக்கையை வெளிடுவது பிரதமரின் கடமை என கூறியுள்ளார்.

Related posts

விபத்துகளை தடுக்கும் வகையில் தேனி போடேந்திரபுரம் விலக்கில் ரவுண்டானா அமைக்கப்படுமா?

பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு இதுவரை இல்லாத அளவில் 28 இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் தேர்வு..!!

லாரி மீது பைக் மோதி கல்லூரி மாணவர் பலி..!!