ஆர்சி காலனி குடியிருப்பு வாசிகளை அச்சுறுத்தி வரும் கற்பூர மரங்களை அகற்ற கோரிக்கை

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு சமூக காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் கற்பூரம் மரங்கள் நடவு செய்யப்பட்டன.
புல்வெளிகள், குடியிருப்புகளை ஒட்டியுள்ள பகுதிகள் அரசு அலுவலக வளாகம், சாலையோரங்கள் போன்ற இடங்களில் இந்த மரங்கள் அதிக அளவு நடவு செய்யப்பட்டன.

தற்போது இந்த மரங்கள் நெடு நெடுவன வளர்ந்து நிற்கின்றன. மழைக்காலங்களில் காற்று அடிக்கும் போது இந்த மரங்களில் இருந்து விபத்துக்களை ஏற்படுத்தி வருகின்றன. சாலை ஓரங்களில் உள்ள மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. சில சமயங்களில் இந்த மரங்கள் விழும் போது உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இதனால் குடியிருப்புகள் அருகே உள்ள இந்த மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

எனினும், ஒரு சில பகுதிகளில் குடியிருப்பு அருகே உள்ள இந்த ராட்சத கற்பூர மரங்களை அகற்றாத நிலையில் பொதுமக்களுக்கு விபத்து அபாயம் உள்ளது. ஊட்டி அருகே உள்ள ஆர்சி காலனி பகுதியில் குடியிருப்புகளை ஒட்டி ஏராளமான கற்பூர மரங்கள் வளர்ந்துள்ளன. இந்த மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அவைகளை அகற்றுவது மாவட்ட நிர்வாகம் மெத்தனம் காட்டி வருகிறது. எனவே, விபத்துகள் ஏதும் ஏற்படும் முன் இந்த மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்