ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் மழை வெள்ளம் புகுந்தது

சென்னை: கனமழை காரணமாக சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் மற்றும் சாலை முழுவதும் மழைநீர் குளம்போல் தேங்கியது. அதிமுக தலைமை அலுவலகம் சுமார் இரண்டு அடி தண்ணீரில் மிதக்கிறது. அங்குள்ள வரவேற்பு அறையில் உள்ள நாற்காலிகளும் மழைநீர் மூழ்கி காணப்பட்டது. பிரதான கதவு மூடப்பட்டு இருந்ததால் அலுவலகத்துக்குள் தண்ணீர் புகுந்தது குறித்த விவரம் தெரியவில்லை. ஆனாலும், அதிமுக அலுவலகத்தின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் தண்ணீரில் தத்தளித்த காட்சியை பார்க்க முடிந்தது.

அதேபோன்று அதிமுக அலுவலகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலை மற்றும் ராயப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள அனைத்து முக்கிய சாலைகளும் சுமார் 3 அடி உயரம் வரை மழை நீரால் சூழ்ந்து காணப்பட்டது. அந்த பகுதியில் உள்ள குடியிருப்பின் தரைதளத்துக்குள் தண்ணீர் புகுந்ததால், அங்கு குடியிருக்கும் மக்கள் செய்வதறியாது திகைத்தனர். காரணம், கடந்த காலங்களில் இதைவிட பெரிய மழை பெய்தபோதுகூட இவ்வளவு தண்ணீர் வந்ததில்லை.

ஆனால் மிக்ஜாம் புயலால் கடல் பகுதியில் அடித்த சூறை காற்றால் கடல் மட்டம் அதிகளவு உயர்ந்து ஆறுகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் கடலுக்குள் செல்ல முடியாததால் இதுபோன்ற நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு