ரவா தேங்காய்ப்பால் அல்வா

தேவையானவை:

ரவை – 1 கப்,
கெட்டியான தேங்காய்ப்பால் – 2 கப்,
தண்ணீர் – 1 கப்,
சர்க்கரை – ஒன்றரை கப்,
நெய் – கால் கப்,
எண்ணெய் – தேவைக்கேற்ப,
முந்திரி – 8,
ஆரஞ்சு (அ) சிவப்பு கலர் – 1 சிட்டிகை.

செய்முறை:

கடாயில் எண்ணெய், நெய் கலந்து ஊற்றி, காய்ந்ததும் அதில் முந்திரி, ரவையை போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கப் தேங்காய்ப்பாலுடன் தண்ணீர் கலந்து சூடாக்கவும். அதில் வறுத்த முந்திரி, ரவையை கொட்டி, கொதிவரும் நிலையில் மீதி உள்ள ஒரு கப் தேங்காய்ப்பாலை ஊற்றிக் கிளறவும். பிறகு கலர் பொடி சேர்த்து வெந்ததும், சர்க்கரையைக் கொட்டிக் கிளறவும். எல்லாம் சேர்ந்து வந்ததும் இறக்கவும். சுவையான ரவா தேங்காய்ப்பால் கேசரி தயார்.

 

Related posts

கேப்சிகம் மசாலா கிரேவி

பிரட் பால்ஸ்

முள்ளு கத்தரிக்காய் துவையல்