‘ரா’ அமைப்பின் தலைவராக ரவி சின்கா நியமனம்

புதுடெல்லி: இந்திய உளவு அமைப்பான ‘ரா’ தலைவராக ரவி சின்கா ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது ‘ரா‘ அமைப்பின் தலைவராக உள்ள சமந்த் குமார் கோயல் வரும் 30ம் தேதி ஓய்வு பெற உள்ளார். இதையடுத்து அந்த பதவிக்கு சட்டீஸ்கர் ஐபிஎஸ் அதிகாரி ரவி சின்காவை ஒன்றிய அரசு நியமித்துள்ளது. நியமனங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை கமிட்டி ரவி சின்காவின் நியமனத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 1988 பிரிவை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரியான இவர் இரண்டு வருடங்கள் இந்த பொறுப்பை வகிப்பார் என அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. ரவி சின்கா தற்போது ஒன்றிய கேபினட் செயலகத்தில் சிறப்பு செயலாளராக உள்ளார்.

Related posts

சுகாதார பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு ஐகோர்ட் ஆணை..!!

விமானப்படை தினத்தை ஒட்டி சென்னையில் வான் சாகச நிகழ்ச்சியை ஒட்டி பயிற்சி..!!

சென்னையில் தேர்வு மையம்; ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பதவிக்கான மெயின் தேர்வு: முதல்நிலை தேர்வில் தேர்ச்சியடைந்த 650 பேர் எழுதினர்