ராசிபுரத்தில் ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து தொழில் செய்வதாகக் கூறி மோசடி செய்த பெண் கவுன்சிலர் கைது..!!

நாமக்கல்: ராசிபுரத்தில் ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து தொழில் செய்வதாகக் கூறி மோசடி செய்த பெண் கவுன்சிலர் கைது செய்யப்பட்டார். ராசிபுரம் 12வது வார்டு பெண் கவுன்சிலர் சசிரேகாவை நகராட்சி அலுவலகத்தில் சுற்றிவளைத்து போலீசார் கைது செய்தனர். குறைந்த வட்டிக்கு பணம் பெற்று தருவதாகவும் ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து தொழில் செய்து வருவதாகக் கூறி மோசடி அரங்கேறியுள்ளது. செல்லவேல் என்பவரிடம் ரூ.2.5 கோடி மோசடி செய்த புகாரில் கவுன்சிலர் சசிரேகா, அவரது கணவர் சதீஷை போலீஸ் தேடி வந்தது.

பலமுறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், நகர மன்ற கூட்டத்துக்கு சசிரேகா வந்துள்ளார். நகர மன்ற கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது கவுன்சிலர் சசிரேகாவை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். கவுன்சிலர் சசிரேகாவிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தலைமறைவாக உள்ள அவரது கணவரை போலீஸ் வலைவீசி தேடி வருகிறது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ரூ.2.5 கோடி மோசடி புகாரில் பெண் கவுன்சிலர் சசிரேகாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

லோகோ பைலட்கள் உடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்திப்பு

ஒரு கிலோ எரிவாயுவுக்கு 100 கி.மீ. தூரம் ஓடும் புதிய மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியது பஜாஜ் ஆட்டோ நிறுவனம்..!!

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் பெண்களும், மகப்பேறு விடுமுறையை எடுக்க தகுதியானவர்களே : ஒடிசா உயர் நீதிமன்றம்