ராசிபுரத்தில் சின்னவெங்காயம் விலை கடும் வீழ்ச்சி; விவசாயிகள் வேதனை..!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சின்னவெங்காயம் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். வெண்ணந்தூர் பகுதிகளில் சில மாதங்களுக்கு முன் சுமார் 1,000 ஏக்கரில் சின்னவெங்காயம் பயிரிடப்பட்டது. சாகுபடி செய்த சமயத்தில் சின்னவெங்காயம் விலை கிலோவுக்கு ரூ.30 வரை விற்கப்பட்டது. சின்னவெங்காயம் விளைச்சல் அதிகமானதால் தற்போது கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பயிரிடப்பட்டது முதல் அறுவடை வரை ஏக்கருக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்