ராசிபுரம் அருகே கிணற்றில் விழுந்த பள்ளி மாணவர், அவரை காப்பாற்ற முயன்ற 3 பேர் நீரில் மூழ்கி பலி..!!

ராசிபுரம்: ராசிபுரம் அருகே பைக்கில் சென்ற 3 மாணவர்கள் நிலை தடுமாறி கிணற்றில் விழுந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கணவாய்பட்டி பகுதியில் ராசாப்பாளைய பள்ளியை சேர்ந்த 3 மாணவர்கள் அபினேஷ், நிதிஷ்குமார், விக்னேஷ் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்துள்ளனர். அப்போது இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சுற்று சுவர் இல்லாத கிணற்றில் விழுந்துள்ளார்கள். அந்த கிணறு 100 அடி ஆழம் கொண்டது. எனவே கிணற்றில் விழுந்த மாணவர்களை மீட்க அருகில் இருந்த 3 பேர் குப்புசாமி, அசோக்குமார், சரவணன் ஆகியோர் கிணற்றில் குதித்துள்ளனர்.

இந்நிலையில், கிணற்றில் சகதியில் அதிகமாக இருந்ததால் காப்பாற்ற சென்ற 3 பேரும் சேற்றில் சிக்கி கொண்டனர். மேலும், 3 மாணவர்களில் அபினேஷ், நிதீஷ்குமாருக்கு நீச்சல் தெரிந்த நிலையில் கயிற்றை பிடித்து மேலே வந்தனர். அதில் 1 மாணவன் மற்றும் காப்பாற்ற சென்ற 3 பேரும் சகதியில் சிக்கி உயிரிழந்துள்ளனர். தகவலறிந்து வந்த ராசிபுரம் தீயணைப்பு துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலமாக மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கிணறு அதிக ஆழம் காரணத்தாலும் சகதிகள் அதிகம் உள்ளதால் அவர்களை மீட்க முடியாத சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், கிணற்றில் மூழ்கிய விக்னேஷ் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். மேலும், 3 பேரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம் விளக்கம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை