பலாத்கார சிறுமியின் அடையாளத்தை காட்டியதாக ராகுலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு தள்ளுபடி

புதுடெல்லி: டெல்லியில் கடந்த 2021ம் ஆண்டு சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் அவரது பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அந்த புகைப்படத்தை தனது டிவிட்டரில் பதிவிட்டார். சிறுமியின் அடையாளத்தை வெளிப்படுத்தியதற்காக ராகுல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர் மகரந்த் சுரேஷ் மகாத்லேகர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு டெல்லி உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மன்மோகன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில் ஆஜரான டெல்லி போலீசார் ராகுல்காந்திக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தனர்.

ராகுலின் சார்பில் ஆஜரான அவரது வழக்கறிஞர், டிவிட்டர் பதிவில் இருந்து சிறுமியின் புகைப்படத்தை ராகுல் அகற்றிவிட்டதாக தெரிவித்தார். மேலும் டிவிட்டரின் வழக்கறிஞரும் ராகுல்காந்தி அந்த டிவிட்டை நீக்கிவிட்டதாக நீதிமன்றத்தில் உறுதிபடுத்தினார். இதனை தொடர்ந்து ராகுலுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யக்கோரும் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Related posts

‘அதிமுகவை விட்டு யாரும் போகல’: சொல்கிறார் எடப்பாடி

மாவட்டந்தோறும் முதியோர் இல்லம்: அரசு அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழ் வழி சான்று உண்மையா? லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரிக்க உத்தரவு