ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தமிழ்நாடு – கர்நாடகா மோதல் சென்னையில் இன்று தொடக்கம்

சென்னை: ரஞ்சி கோப்பை தொடரின் 6வது சுற்று ஆட்டங்கள் இன்று நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் தொடங்குகின்றன. சி பிரிவில் உள்ள தமிழ்நாடு – கர்நாடகா அணிகள் மோதும் போட்டி, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளும் தலா 5 ஆட்டங்களில் விளையாடி உள்ள நிலையில், 21 புள்ளிகள் பெற்று சமநிலையில் உள்ளன. எனினும், ரன் ரேட் அடிப்படையில் தமிழ்நாடு முதல் இடத்திலும் கர்நாடகா 2வது இடத்திலும் உள்ளன. சென்னையில் நடக்கும் போட்டியில் வெற்றி பெறும் அணி காலிறுதிக்கு முன்னேறுவது உறுதியாகி விடும் என்பதால், சாய் கிஷோர் தலைமையிலான தமிழ்நாடு அணியும், மயாங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடக அணியும் வெற்றிக்கு வரிந்துகட்டுகின்றன.

தமிழ்நாடு: சாய் கிஷோர் (கேப்டன்), பி.சச்சின், வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சன், விஜய் சங்கர், முகமது அலி, பிரதோஷ் ரஞ்சல் பால், நாராயண் ஜெகதீசன், சுரேஷ் லோகேஷ்வர், பாபா இந்திரஜித், எம்.முகமது, டி.நடராஜன், திரிலோக் நாக், சந்தீப் வாரியர். கர்நாடகா: மயாங்க் அகர்வால் (கேப்டன்), தேவ்தத் படிக்கல், மணிஷ் பாண்டே, நிகின் ஜோஸ், ரவிகுமார் சமர்த், தேகா நிஷ்சல், முரளிதரா வெங்கடேசா, சுபாங் ஹெக்டே, சீனிவாஸ் சரத், சுஜய் சதேரி, வித்வத் கவுரப்பா, வாசுகி கவுசிக், விஜயகுமார் விசாக், ரோகித் குமார், சசி குமார்.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு