ரஞ்சி கோப்பை தேதி அறிவிப்பு

மும்பை: ரஞ்சி கோப்பை, விஜய் ஹசாரே, சையத் முஷ்டாக் அலி டிராபி உள்பட 2023-24 சீசன் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களுக்கான தேதி அட்டவணையை பிசிசிஐ நேற்று அறிவித்தது. மண்டலங்களுக்கு இடையிலான துலீப் கோப்பை தொடர் ஜூன் 28ம் தேதி தொடங்கும். 6 மண்டலங்களுக்கு இடையிலான தியோதர் கோப்பை டி20 தொடர் ஜூலை 24 – ஆகஸ்ட் 3 வரை நடத்தப்படும். நடப்பு ரஞ்சி சாம்பியனான சவுராஷ்டிரா அணியுடன் இதர இந்திய அணி மோதும் இரானி கோப்பை போட்டி அக்.1ம் தேதியும், சையத் முஷ்டாக் அலி டி20 தொடர் அக்.16ம் தேதியும் தொடங்க உள்ளன. விஜய் ஹசாரே ஒருநாள் தொடர் நவ.23 – டிச.15 வரை நடைபெறும். ரஞ்சி கோப்பை டெஸ்ட் தொடர் 2024 ஜன.5 – மார்ச் 14 வரை நடக்க்க உள்ளது. மகளிர் அணிகள் மோதும் போட்டிகளுக்கான தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. மண்டல அளவில் சீனியர் மகளிர் அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி நவ.24 – டிச.4 வரை மற்றும் சீனியர் மகளிர் ஒருநாள் தொடர் ஜன.4 – 26ல் நடைபெறும். இந்த ஆண்டு ஜூன் முதல் 2024 மார்ச் கடைசி வாரம் வரை மொத்தம் 1846 ஆட்டங்கள் நடைபெற உள்ளதாக பிசிசிஐ செயலர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.

Related posts

ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தில் விரிவுரையாளர்

டெல்லி ராஜதானி கல்லூரியில் உதவி பேராசிரியர்கள்

ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை