ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ் பெற ராகுல், பிரியங்காவுக்கு தகுதி இல்லை: அறக்கட்டளை நிர்வாகம் விளக்கம்

லக்னோ: அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி காங்கிரஸ் கட்சி பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு அழைப்பிதழ் அனுப்பப்படாதது விவாதங்களை கிளப்பியுள்ளது.

இதுகுறித்து “முக்கிய கட்சிகளின் தலைவர்கள், மக்களவை, மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர்கள், மற்றும் 1984 – 1992 காலகட்டத்தில் ராமர் கோயில் இயக்கத்தில் பங்கேற்றவர்கள் என்ற 3 அளவுகோல்களின் அடிப்படையில் ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் அழைப்பிதழ் பெற தகுதியற்றவர்கள் என ராமஜன்ம பூமி அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது” என செய்திகள் வௌியாகி உள்ளன.

* ராமர் எங்கள் இதயங்களில் இருக்கிறார் – திக்விஜய் சிங்

காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறுகையில், “ராமர் கோயிலுக்கு செல்ல எங்களுக்கு யாருடைய அழைப்பிதழும் தேவையில்லை. ராமர் எங்கள் இதயங்களில் இருக்கிறார்” என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

Related posts

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை