ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி 11 நாள் சிறப்பு பிரார்த்தனை தொடங்கினார் பிரதமர் மோடி

புதுடெல்லி: ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி பிரதமர் மோடி 11 நாள் சிறப்பு பிரார்த்தனையை தொடங்கி உள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் வரும் 22ம் தேதி மதியம் 12.20 மணிக்கு ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதுகுறித்து பிரதமர் தன் ட்விட்டர் பதிவில் வௌியிட்டுள்ள ஆடியோவில், “ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு இன்னும் 11 நாட்களே உள்ளதால் நான் இன்று(நேற்று) முதல் 11 நாள் சிறப்பு பிரார்த்தனையை தொடங்குகிறேன். நான் இப்போது உணர்வுகளில் மூழ்கி மிகவும் உணர்ச்சிவசப்பட்டவனாக இருக்கிறேன். என் வாழ்க்கையில் முதன்முறை இதுபோன்ற உணர்வை அனுபவிக்கிறேன். பல தலைமுறைகள் தங்கள் இதயங்களில் ஒரு தீர்மானமாக சுமந்து கொண்டிருந்த கனவை நான் உணருகிறேன். நான் மேற்கொள்ளும் இந்த உள்ளார்ந்த பயணத்தை அனுபவிக்க மட்டுமே முடியும். வார்த்தைகளால் விவரிக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா