ராம நவமி, சிவராத்திரிக்கு ஒன்றிய அரசு பொது விடுமுறை வழங்க உத்தரவிட முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை: ராம நவமி, சிவராத்திரி போன்ற பண்டிகைகளுக்கு பொது விடுமுறை அறிவிக்குமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட கோரி கடலூரை சேர்ந்த அர்ஜுனன் இளையராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கடந்த 2023 அக்டோபர் 14ம் தேதி ஒன்றிய உள்துறை செயலாளர், சட்டம் மற்றும் நீதித்துறை செயலாளர், நிதித்துறை செயலாளரிடம் இதுபற்றி மனு அளித்தேன். ஆனால் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. எனவே, எனது மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு, ராம நவமி, சிவராத்திரி போன்ற பண்டிகைகளுக்கு பொது விடுமுறை அறிவிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட முடியாது. மனுதாரர் கோரிக்கை மனுவை பரிசீலிக்குமாறு ஒன்றிய அரசை அணுகலாம் என்று கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.

Related posts

ஹெலிகாப்டர் சகோதரர்களான பாஜ பிரமுகர்களின் சொத்தை வழக்கில் இணைக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

தொடர்ந்து 5 மணி நேரம் பட்டாசு ஆலை வெடித்ததால் 50 வீடு சேதம்

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு; வீரப்பன் கூட்டாளி தலைமறைவு குற்றவாளி: ஈரோடு கோர்ட் அறிவிப்பு