ராம்நகர் மாவட்டம் பெங்களூரு தெற்கு என பெயர் மாற்றம் கேஆர்எஸ் அணை பகுதியில் டிஸ்னி பார்க்: கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்

பெங்களூரு: ராம்நகர் மாவட்டம் இனி பெங்களூரு தெற்கு மாவட்டம் என மாற்றவது, கேஆர்எஸ் அணை பகுதியில் டிஸ்னி பார்க் போன்று புதிய கேளிக்கை மையம் அமைப்பதற்கான டெண்டர் கோருவது, புதிய செயலாளராக ஷாலினி ரஜனீஷ் நியமனம் என்பன உள்ளிட்ட முடிவுகள் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக அமைச்சர் எச்.கே.பாட்டீல் கூறினார். பெங்களூரு விதான சவுதாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் நிபர்களிடம் கூறியதாவது, ‘தற்போதைய ராம்நகர் மாவட்டத்தை பெங்களூரு தெற்கு மாவட்டம் என பெயர் மாற்றும் திட்டத்திற்கு அமைச்சரவை முழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி ராம்நகர் மாவட்டத்தின் பெயர் உடனடியாக பெங்களூரு தெற்கு மாவட்டம் என மாறுகிறது. அதே நேரம் நிர்வாகம் உள்ளிட்டவை பழையபடி நடைபெறும்.

பெங்களூரு பிராண்ட் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் யோசனைகளை அமல்படுத்தும் வகையில் இந்த பெயரை வைப்பதற்கான முடிவை மாநில அமைச்சரவை எடுத்துள்ளது. 2017-18ம் ஆண்டுக்கான அரசிதழில் உள்ள தகுதி ஆட்சேர்ப்பு தேர்வுக்கு விண்ணப்பித்த அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் வயது வரம்பை ஒருமுறை தளர்த்துவதற்கு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை (டிபிஏஆர்) முன்மொழிந்தது.

2023-24ம் ஆண்டுக்கான கெசடெட் ப்ரோபேஷனர்கள் தேர்வு. முன்மொழிவுக்கான தேதி: 21.06.2024 தேதியிட்ட அரசாணைக்கு அமைச்சரவை முன்னோடியாக ஒப்புதல் அளித்துள்ளது. 2017-18 ம் ஆண்டுக்கான கெசடெட் நன்னடத்தையாளர் நியமனத்திற்கு விண்ணப்பித்திருந்த அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர தார்வாட்டில் உள்ள காமனகட்டி தொழிற்பேட்டையில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் அமைப்பதற்காக 2.64 ஏக்கர் நிலம் வழங்குவது, ரூ.16 கோடி செலவில் தொழில்துறை, கல்வி நிறுவனங்கள், அரசாங்கம் மற்றும் AVGC (அனிமேஷன், விஷுவல் எபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ்) என்ற சிறப்பு மையம் தொடங்க அரசு முடிவு செய்து இதற்கான அனுமதியை அமைச்சரவையும் அளித்துள்ளது.

2024-25ம் ஆண்டில் தற்போது வாடகை கட்டிடங்களில் இயங்கி வரும் 18 மாணவர் விடுதிகளுக்கு சொந்தக் கட்டிடம் வழங்கப்படும் என முதால்வர் சித்தராமையா ஏற்கனவே கூறியிருந்தார். அதன்படி 100 மாணவர்களுக்கு ஒரு விடுதி என 15 விடுதிகள் கட்டுவது என அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒவ்வொரு விடுதி கட்டுவதற்கு ரூ.7 கோடி என மொத்த திட்ட மதிப்பீடு ரூ.105.00 கோடியில் பொதுப்பணித்துறை மூலம் இந்த பணியை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

விரிவுரையாளர்களின் நேரடி ஆட்சேர்ப்புக்கான அட்டவணை ஜாதி மற்றும் சாதிப் பிரிவினருக்கு மட்டும் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் ஒதுக்க வேண்டும் என்ற பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  நிறுவனங்கள் சட்டம் 2013ன் கீழ் கர்நாடக திறன் மேம்பாட்டு கழகத்தை அமைக்க மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதற்கான பணியாளர்களை நியமிக்கவும் குறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.

மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கேஆர்எஸ்) நீர்த்தேக்கத்தின் கீழ் 198 ஏக்கர் பரப்பளவில் பூங்காவை அழகுபடுத்துதல் மற்றும் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்காக ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. இந்த பணிகளுக்கான அனுமதியை ஏற்கனவே அரசு ஒப்புதல் அளித்த நிலையில் டெண்டர் கோருவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பணிகள் முடிவடைந்தால் கர்நாடக மாநிலத்தின் முதன்மை சுற்றுலா மையமாக கேஆர்எஸ் மாறிவிடும்.

கிருஷ்ணராஜசாகர் அணையின் பிருந்தாவன் பூங்காவின் விரிவான திட்ட அறிக்கையை, நிதித்துறை, திட்டமிடல் துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு துறைமுகம் மற்றும் உள்நாட்டு நீர் போக்குவரத்துத் துறை ஆகியவற்றின் கருத்தின் அடிப்படையில் டெண்டர் மூலம் பொது-தனியார் கூட்டுக் கட்டமைப்பில் உலகத் தரத்திற்கு மாற்றியமைத்து செயல்படுத்தப்படும். இதன் மொத்த திட்டச் செலவு ரூ.2663.74 கோடி ஆகும்.

மாநில தலைமை செயலாளர் கோயல் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் புதிய தலைமை செயலாளரை நியமிக்கும் அதிகாரம் முதல்வர் சித்தராமையாவுக்கு அமைச்சரவை வழங்கியது. அதன்படி ஷாலினி ரஜனீஷ் கோயலை புதிய தலைமை செயலாளராக நியமித்து முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 15 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு

திருப்பதி லட்டு சர்ச்சை.. கோயிலுக்கு நாங்கள் அனுப்பிய நெய்யில் எந்த குறைபாடும் இல்லை: ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் விளக்கம்!!

ஒன்றிய அமைச்சர் மூலம் அச்சுறுத்தல்; ராகுலுக்கு எஸ்பிஜி கமாண்டோ பாதுகாப்பு வேண்டும்: காங். செய்தி தொடர்பாளர் வலியுறுத்தல்